Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கணக்கு அலுவலர் நிலை- III பதவி: TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை-III பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதிவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும். 


விளம்பர எண். 618  அறிவிக்கை எண். 14 / 2022


பதவி: கணக்கு அலுவலர் நிலை - III


தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.


காலியிடங்கள்: 23


சம்பளம்: மாதம் ரூ.56,900 - 2,09,200


வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 


கட்டணம்:  நிரந்த பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 


தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


தேர்வு மையம்: கணினி வழித் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். 


விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.08.2022


மேலும் விவரங்கள் அறிய  https://www.tnpsc.gov.in/Document/tamil/AO-%20Tamil%20CBT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.



Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/6pYaZkd
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments