சவுக்கு சங்கருக்கு
பதில்
அறம் போதித்து பழக்கப்பட்டாலும் அவ்வபோது மடையர்களுக்கு மறத்தோடு எழுத வேண்டியதாகிறது
பலகையும் பலப்பமுமாய் யார் வந்தாலும் உலகை அறியவைத்து
சிறகை அளித்து சிறப்பு சேர்த்திருக்கிறோம்
கைநாட்டுக் கலாச்சாரம் ஒழிய வைத்து
அடிமை முதுகை நிமிரச்செய்த செயல் வீரர்கள் நாங்கள்
அ ன்னா ஆ வன்னா மட்டுமல்ல நாணயத்தையும் நல்நடத்தையையும் உடன் குழைத்தே அளிக்கிற உத்தமசீலர்கள் நாங்கள்
நீ
அள்ளிக்குவிக்கிற லைக்குக்களின் அடிநாதத்தில் அத்தனை ஆத்மாக்களின் அரும்பெரும் உழைப்பிருக்கிறது
வெளிச்சமற்ற உங்கள் பாதையின் பேரொளியாய்
உன் கற்றலுக்கு பலசமயம் போராளியாய் போராடிக் களைத்தவர்கள்
திருட்டுச் சம்பளம் வாங்குவோர் மத்தியில் பல இருட்டுகளை அழித்த பகலவன்கள் நாங்கள்
இவ்வுலகின் கருவாக்கம் கடவுளெனில்
உத்தியோகத்தோடு உலவும் உங்கள் அனைவரின் உருவாக்கம் இந்த எழுத்தறிவிப்பவர்கள்
எங்கள் உத்தியோக ஊதியமே உங்கள் வயிற்றெறிச்சலா??
நாட்டில் கிடக்கிற கசடுகளின் தோலுரிக்க திராணி இல்லாத கோமாளியே
கறையில்லா கரங்கள் எங்களை குறைகூற உங்கள் உள்மனம் குறுகுறுக்க வில்லையா?
உங்களை ஆளாய் வளர்த்து பிரம்மித்தும் பூரித்தும் கிடக்குற எங்கள் உள்ளங்களை உங்கள் கோணல் வாளால் இனியும் கீறிடாதீர்
நாணல் போலவே எப்போதும் வளைந்து கிடப்பவனல்ல ஆசிரியன்
நிமிர்ந்தெழுந்தால் எங்கள் நேர்மையின் ரௌத்திரத்தை தாங்காது இந்நிலவுலகு
நாவில் நரம்பற்று
கண்டதைக் கதறும் குளிரறைக் குள்ள நரியே
உன் ஈன புத்தியால்
ஒருபோதும் குலையாது எங்கள் மாண்பு
ஆம்
இப்போது கூட உனக்கு வகுப்பெடுத்துக் கொண்டு தானிருக்கிறேன்
உன் ஒழுகிய மூக்கு துடைத்து தோள் தட்டிப்பழகிய பரமாத்மாவை கொச்சையாக்குமுன் ஆயிரம் தடவை யோசி
ஆசிரியன் சிறியன் அல்ல
இதை ஆயிரம் தடவைக்கு மேலும் நீ வாசி
இனியேனும் பேசுமுன் யோசி
சீனி.தனஞ்செழியன் கவிதையிலிருந்து
சீனி.சந்திரசேகரன்
TNPTF
from கல்வி அமுது https://ift.tt/9OEY2Zc
via IFTTT
0 Comments