Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - School Education Department orders to extend quarterly examination holiday to students செய்திக்குறிப்பு

காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.



from கல்வி அமுது https://ift.tt/z2lwhH5
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments