காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , பிக்கனஅள்ளி ஊராட்சியில் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த பின்வரும் மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு காலாண்டுத் தேர்வு கணக்குத் தாள் தேர்வினை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மாணவர்களை சந்தித்து தேர்வு குறித்து வினாத்தாளிலிருந்து கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதில் மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் அறிவு இல்லை என தெரிய வந்தது. இவ்வாறான நிலையில் , மாணவர்களிடம் எப்படி தேர்வு எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது , தொடர்புடைய ஆசிரியர் கரும்பலகையில் வினாவிற்கான பதிலை எழுதி வைத்ததாகவும் , அதைப் பார்த்து தேர்வு எழுதி திரும்பியதாகவும் பதிலளித்தனர். மாணவர்களுக்கு கணிதத்தை முறையாக சொல்லிக் கொடுத்து , அவர்களின் கல்வி அறிவு மேம்பட இல்லம் தேடி கல்வி மையங்களில் சீரிய முறையில் கற்பிக்க அறிவுறுத்தப்படுகிறது .
மாணவர்கள் :
1. எம்.கலையரசன் - 8 - ஆம் வகுப்பு
2.எஸ்.கே.நாகராஜ் - 6 - ஆம் வகுப்பு
3.எஸ்.கே.சிவபாலா - 6 - ஆம் வகுப்பு
Recommanded News
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/yRIExL1
via IFTTT
0 Comments