தமிழக அரசு பள்ளிகளில் உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு, நாளை துவங்கும் நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு :
தமிழக பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு , கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களுக்கான டெட் தகுதி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான, TET தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியானது. அதன்படி, தமிழகத்தில் 4 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர். சில காரணங்களால் இந்த தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டு, கடந்த 23ஆம் தேதி மறு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இதன் அடிப்படையில் அக்டோபர் 14 ஆம் தேதியான நாளை முதல் 20ம் தேதி வரை, இரு நேரங்களிலும் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. கணினி வாயிலாக நடக்கும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியானது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று, கலந்தாய்வின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளது
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/12e9g54
via IFTTT
0 Comments