அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் அசத்தல் முயற்சியில் வித்தியாசமான காலண்டர் :
சமூக வலைதளங்களில் ட்ரண்ட் ஆகி வரும் அரசு பள்ளியின் காலண்டர்
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த காலண்டரின் சிறப்பம்சங்களை தற்போது காணலாம்.
அரசு பள்ளிகளின் பெருமைகளையும், அரசு பள்ளியில் படித்தால் கிடைக்கும் பலன்களையும் மற்றும் சிறப்பு அம்சங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான முறையில் காலண்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள் இந்த காலண்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம்
திருவாரூர் மாவட்டம் பழையவலம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் திருமதி கலைவாணி அவர்கள் தன்னுடைய பணிக்காலத்திலிருந்து மாணவர்களுடைய முன்னேற்றத்திற்கு துணை நின்று வித்தியாசமான முறைகளினை கையாண்டு கல்வி போதித்து வழிகாட்டி வருபவர்.
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடைய புதிய சிந்தனையால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு வித்தியாசமான காலண்டர் ஒன்றை வெளியிட்டு அதனை அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கி இருக்கிறார்கள்.
இந்த காலண்டரில் அந்த பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவர்களுடைய புகைப்படங்களும் இடம் பெறும்படி அமைந்துள்ளது.
இந்த காலண்டரில் உள்ள சிறப்பம்சங்களை நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள் இதோ....
நம் பள்ளி நம் பெருமை என தொடங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழையவலம் பள்ளியின் காலண்டர் அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம் என நம் கவனத்தை இருக்கிறது.
காலண்டரின் சிறப்பம்சங்கள் :
இந்த காலண்டரில் அச்சடிக்கப்பட்ட உண்மையை உரக்க உரைக்கும் வாசகங்கள்
* அரசுப் பள்ளியில் சேருங்கள் அப்துல் கலாம் ஆகலாம்.
* அரசு பள்ளியில் படித்தவருக்கு அரசு பணியில் முன்னுரிமை
* அரசுப் பள்ளிகள் என்பவை அரசின் சொத்து மட்டுமல்ல மக்களின் சொத்து
பள்ளியின் சிறப்பம்சங்கள் இந்த காலண்டரில் இடம் பெற்றுள்ளன
* பயிற்சி பெற்ற அனுபவிக்க ஆசிரியர்கள்
* கட்டணமில்லா கல்வி
* விலையில்லா
பாடநூல்கள்
பாட குறிப்புகள்
சீருடைகள்
புத்தகப்பை
வண்ண மெழுகு பென்சில்
வண்ணப் பென்சில்
பெண் கல்வி ஊக்கத்தொகை
மதிய உணவு
from கல்வி அமுது https://ift.tt/nEz73bZ
via IFTTT
0 Comments