Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஆசிரியர்களுக்கு ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசர்களுக்கான பயிற்சி

திருவாரூர் மாவட்ட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களுக்கு ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசர்களுக்கான  பயிற்சியானது கஸ்தூர்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 07.03.2023 இன்று நடைபெற்றது.




ஜூனியர் ரெட் கிராஸ் அலோசகர்களுக்கான இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்ட கன்வீனர் இரா.செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) C.மாயகிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் E.மாதவன் (இடைநிலை)  ஆகியோர் தலைமை வகித்தார்கள். திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் கௌரவச் செயலர் J.வரதராஜன் அவர்களது முன்னிலையில்  கஸ்தூர்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை நிர்வாக அலுவலர் V. சின்னராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினனார். 

 இப் பயிற்சியில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், திருவாரூர் மாவட்ட ரெட்கிராஸ் செயலர்  ஆலோசர்களுக்கு  பள்ளிகளில் JRC செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் மேலும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதை பற்றி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். 



ரெட்கிராஸ் மாவட்ட பயிற்றுநர் மீனா.சாமிநாதன் ஆலோசர்களுக்கு பயிற்சியினை வழங்கினார். இந்த பயிற்சியில் 132 பள்ளிகளில் உள்ள ஆலோசகர்கள் கலந்து கொண்டார்கள்.
பணி நிறைவு பெற்ற ஆனைக்குப்பம் பள்ளியின் ஜே.ஆர்.சி ஆலோசகர் s.உதயகுமார் அவர்களுக்கு பாராட்டு செய்ய ப்பட்டது.


இறுதியாக மன் பா உல் உலா பள்ளியின் ஆசிரியர் D. துரைசேரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.




from கல்வி அமுது https://ift.tt/TpfjW1b
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments