கலெக்டர் அம்ரித் அறிக்கை: 2023- 24 ம் நிதியாண்டில், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த, 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில், 3,093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில், 9 அல்லது 11 ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக, 75 ஆயிரம் ரூபாய், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக, 1.25 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இத்தேர்விற்கு வருபவர்கள் ஆக., மாதம், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளை அணுகலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/crOKw9d
via IFTTT
0 Comments