Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

CUET PG - க்யூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு ( Result Direct Link)

CUET PG - க்யூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு ( Result Direct Link..)


புதிய கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test ) நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.


இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த க்யூட் நுழைவுத்தேர்வை 9,76,908 மாணவர்கள் எழுதினர்.


தேர்வு முடிவுகளை www.cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தேசிய கல்வி முகமை தெரிவித்து உள்ளது.  




from கல்வி அமுது https://ift.tt/rmYwOdZ
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments