சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐநா சபை உலக சிறுதானிய ஆண்டாக 2023 அறிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கருத்தரங்கு நிகழ்ச்சி திருவாரூர், விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அலுவலர் திரு அ புகழேந்தி தலைமை வகித்தார் நிகழ்ச்சியினை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மாயகிருஷ் ணன் தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.சு. ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர் திரு அ புகழேந்தி
நமது நாடு சிறு தானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. சிறுதானியங்கள் உணவாகவும் நோய்க்கு மருந்தாகவும் நோய் வராமல் தடுக்கும் அரணாகவும் விளங்குகிறது... மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே சிறுதானியங்கள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும் என்றார்...2023 சிறுதானிய ஆண்டாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்... சிறுதானியங்களை தினசரி உணவாகக் கொள்வோம் என்றார்.
கருத்தரங்கின் நடுவர்களாக திருனைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் காளிதாஸ், மாவட்டக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் ரமேஷ் குமார், பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மீனா.சாமிநாதன், அரிச்சந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.முரளி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இந்த கருத்தரங்கத்தில் எட்டாம் வகுப்பு 8 9 10 ஆகிய வகுப்புகளை சார்ந்த மாணவர்கள் சிறுதானிய உணவுகள் நன்மையை தருகின்றனவா?.. பத்திய உணவா?.. என்ற தலைப்பில் 180 மாணவர்கள் 180பள்ளிகளிகளிலிருந்து மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்தக் கருத்தரங்கில் சிறப்பான மூன்று இடங்களை பெற்ற மாணவர் விபரம் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
👍👉முதலிடம் க.அன்புகவின் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கொரடாச்சேரி
👍👉இரண்டாம் இடம் ஆர்.அஞ்சலி ஆர்.சி.பாத்திமா பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்.
👍👉மூன்றாம் இடம் கனிஷ்கா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மன்னார்குடி
மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
முடிவில் நியு பாரத் மெட்ரிக் பள்ளி முதல்வர் திரு முரளிதரன் நன்றி கூறினார்.
from கல்வி அமுது https://ift.tt/W9DlEfh
via IFTTT
0 Comments