Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் தேதி குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2023-2024 ஆம் கல்வியாண்டில் , காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கும் நாள் 03.10.2023 ஆகும்.

பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பி வைத்திட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 மேலும் , இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


from கல்வி அமுது https://ift.tt/O2aKjA1
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments