மக்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது போல், நாடு முழுதும் பள்ளி மாணவ -- மாணவியருக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அட்டைக்கு, 'தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு' அதாவது 'அபார்' என, பெயரிடப்பட உள்ளது.
இதில், மாணவரின் முழுமையாக கல்வி விபரம், கூடுதல் திறமைகள் பதிவு செய்யப்பட உள்ளன.
'அபார்' அட்டையின் அடிப்படை தகவல்கள் அவர்களின் 'ஆதார்' தகவல்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் கருத்து கேட்புக்கு பிறகே, இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். இதுகுறித்து, விரிவான அறிவிப்புகள் அடுத்தாண்டு துவக்கத்தில் வெளிவர உள்ளது' என்றனர்.
from கல்வி அமுது https://ift.tt/P6mZc41
via IFTTT
0 Comments