Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 Std Science Term-1 Unit-3 Part-1 Notes of lesson t/m I அலகு 3.1 : நம்மைச் சுற்றியுள்ளப் பருப்பொருள்கள் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

 ஆசிரியர் பாடக்குறிப்பேடு (NOTES OF LESSON)


Topic             :     Notes of Lesson For 6th std  Science


Class             :     


Term               :    1


Subject          :     SCIENCE


Unit                 :    3 Part-1


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


CLICK HERE TO DOWNLOAD


கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 6  பருவம் :1    பாடம் : அறிவியல்   அலகு 3.1 : நம்மைச் சுற்றியுள்ளப் பருப்பொருள்கள்

அலகின் தன்மை : மை சிந்தும் வகை      கற்கும் முறை : குழு கற்றல்     பக்கம் எண் : 37-44

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

·        சர்க்கரை, நீர், கண்ணாடிக் குச்சி, மணல், பலூன், திட,திரவ,வாயு பொருட்கள், காய்கறி கலவை, சல்லடை, வடிதாள், காந்தங்கள், இணைய வளங்கள்

கற்றல் விளைவுகள் :

L.O : S602 தூயப்பொருள்களையும் கலவைகளையும்  வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).

L.O : S605 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்.

  • Ø  லவைகளைப் பிரித்தெடுக்கும் முறைகளை  காரணங்களோடு தொடர்புபடுத்தல்.

L.O : S606  செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல். (எ.கா :விரவுதல்)

L.O : S610 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.

  • Ø  லவைகளை உரிய முறையில் பிரித்தல் , உணவுக்கலப்படம் பற்றிய விழிப்புணர்வு பெறல்)

 

கற்றல் நோக்கங்கள் :

  • Ø  பண்புகளின் அடிப்படையில் பொருள்களை வகைப்படுத்தி அறிதல்.
  • Ø  திண்ம, திரவ, வாயுப் பொருள்களை துகள்களின் அடிப்படையில் வேறுப்படுத்தி அறிதல்.

அறிமுகம் :

        பருப்பொருள் நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் உள்ளது. பருப்பொருள்கள் மூன்று நிலைகளில் காணப்படுகிறது. அவை என்னென்ன என தெரியுமா? என அறிமுகம் செய்தல்.

படித்தல் :

பருப்பொருள்களின் இயற்பியல் தன்மை, விரவுதல், திட,திரவ,வாயுப் பொருள்களின் நிறை, வடிவம், பருமன், அழுத்தம் போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

மனவரைபடம் :




தொகுத்தலும் வழங்குதலும்:

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

v  பருப்பொருள்கள் எத்தகைய தன்மையுடையது என தொகுத்து கூறுதல்.

v  திண்ம, திரவ, வாயுப் பொருள்களுக்கான வேறுபாட்டினை அட்டவணைப்படுத்துதல்.

v  திண்ம, திரவங்களின் அழுத்தத்தை வாயுக்களின் அழுத்தத்தோடு ஒப்பிட்டு பட்டியலிடல்.

வலுவூட்டல் :

  • Ø  செயல்பாடு 1 : பருப்பொருள்களின் படத்தொகுப்பினை உற்று நோக்கி வகைப்படுத்தச் செய்து  
  •                  எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது என விவாதித்தல்.
  • Ø  செயல்பாடு 2 : இயற்பியல் நிலைகளின் அடிப்படையில் பொருள்களைப் பிரித்தல்.
  • Ø  செயல்பாடு 3 : ஊதுவர்த்தி, பேனா மை, நீர் கொண்டு விரவுதல் சோதனை செய்தல்.
  • Ø  செயல்பாடு 4 : சைக்கிள் டியூப்பில் காற்று நிரப்பி காற்றுக்கு நிறை உண்டா என அறிதல்.
  • Ø  செயல்பாடு 5 : உறிஞ்சுக் குழாய்கள் மூலம் திண்ம, திரவ, வாயுக்களின் அழுத்த சோதனை.

மதிப்பீடு :

  • Ø  திண்மங்களில் துகள்களுக்கான இடைவெளி __________.
  • Ø  அதிக இடைவெளியுடன் துகள்கள் பெற்றிருந்தால் அவை _____________.
  • Ø  திரவத்தின் துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை திண்மப் பொருளை விட ________.

குறைதீர்க் கற்றல் :

        QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

        FA (a) : 1. வெவ்வேறு வடிவ கொள்கலன்களில் சம அளவுள்ள நீரினை ஊற்றி திரவத்தின் வடிவம், பருமன் ஆகியவற்றை உற்றுநோக்கி பட்டியலிட்டு வரச் செய்தல்.

        FA (a) : 2. மூன்று உறிஞ்சுக் குழாய்களைக் கொண்டு திண்ம,திரெஅவ, வாயுக்களின் அழுத்த செயல்பாடு செய்து அதன் விபரங்களை வகுப்பறையில் விவாதிக்கச் செய்தல்.




Reactions

Post a Comment

0 Comments