ஆசிரியர் பாடக்குறிப்பேடு (NOTES OF LESSON)
Topic : Notes of Lesson For 6th std Science
Class : 6
Term : 1
Subject : SCIENCE
Unit : 4 Part-1
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
we share you the model lesson plan for all subjects.
கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON
வகுப்பு : 6 பருவம் :1 பாடம் : அறிவியல்
அலகு 4.1: தாவரங்கள் வாழும்
உலகம்
அலகின் தன்மை : மை சிந்தும் வகை கற்கும் முறை : குழு கற்றல் பக்கம் எண் : 64-68
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
·
சிறு செடி,
ஆணி வேர், சல்லி வேர், இஞ்சி, பால்சம் தாவரம், சிவப்பு மை, கேரட், நீர், குவளை, இணைய
வளங்கள்
கற்றல் விளைவுகள் :
L.O : S601 உயிரினங்களை இனங்காணல் (IDENTIFICATION)
v தாவரங்களின் தகவமைப்புகளையும் மாற்றுருக்களையும்
இனங்காணல்.
L.O : S606 செயல்கள் மற்றும்
நிகழ்வுகளை விளக்குதல்.
- Ø தாவரங்களின் அமைப்பு மற்றும் செயல்களை அறிதல்)
L.O : S608 படங்களைப் பாகங்கள் குறித்து வரைதல்.
- Ø தாவரத்தின் அமைப்பு, தண்டு, இலை ஆகியவற்றின் படங்களை
வரைந்து பாகங்களை குறித்தல்
L.O : S611 சுற்றுப் புறத்தைப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்.
கற்றல் நோக்கங்கள் :
- v தாவரங்களின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்த அறிதல்.
- v தாவரங்களின் இலை, வேர், தண்டு அமைப்பு மற்றும் பணிகளை அறிதல்
அறிமுகம் :
சிறு தாவர செடியின் வேர், தண்டு, இலை, கிளை, மலர் போன்றவற்றை காண்பித்து அறிமுகம் செய்தல்.
படித்தல் :
தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள், வேர்த்தொகுப்பு, இலையின் அமைப்பு போன்ற பாடக் கருத்துக்களை மாணவர்களை படிக்க செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.
மனவரைபடம் :
தொகுத்தல் மற்றும் வழங்குதல் :
மன வரைபடத்தில் உள்ள விபரங்களை
மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்க
செய்தல்.
- Ø பூக்கும் தாவரங்களின் இரண்டு முக்கிய தொகுப்பான வேர்த்தொகுப்பு மற்றும் தண்டுத் தொகுப்பினை பட்டியலிட்டு விளக்குதல்.
- Ø இலையின் அமைப்பினை படம் வரைந்து விளக்குதல்.
- Ø தாவர வேர், தண்டு, இலை ஆகிய பணிகளை அட்டவணைப்படுத்துதல்.
வலுவூட்டல் :
செயல்பாடு 1 : ஒரு குவளை நீர் நீல மை கேரட் ஆகியவற்றைக் கொண்டு வேரின் மூலம் நீரை
உறிஞ்சுதல் சோதனை செய்தல்.
செயல்பாடு 2 : பால்சம் தாவரத்தின் ஒரு சிறு கிளை, ஒரு குவளை நீர், சிவப்பு மை மூலம்
தண்டின் மூலம் நீர் கடத்தல் சோதனை செய்தல்.
செயல்பாடு 3 : பள்ளி வளாகத்தை சுற்றி உள்ள தாவரங்களிலிருந்து மாணவர்கள்
தாவரப்பாகங்களை சேகரிக்கச் செய்தல்.
மதிப்பீடு :
- § இரு வித்திலை தாவரங்களில் காணப்படும் வேர் ___________________.
- § உணவை தங்களின் வேர்களில் சேமிக்கும் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டு ______________.
- § தண்டில் இலைகள் தோன்றும் பகுதி ______________.
- § தாவரத்தின் ____________ வழியே நீராவிப்போக்கு போக்கு நடைபெறுகிறது.
குறைதீர்க் கற்றல் :
இணையச் செயல்பாடு, QR CODE வீடியோ மூலம் மெல்ல மலரும் மாணவர்களுக்கு மீளக் கற்பித்தல்.
எழுதுதல் :
பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.
தொடர்பணி :
மாணவர்களை தங்கள்
பகுதியில் காணப்படும் தாவரப் பாகங்களை சேகரிக்கச் செய்து தாளில் ஒட்டி
சமர்ப்பிக்கச் செய்தல்.
0 Comments