Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8 அல்லது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் அரசு, தனியார் ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

8 அல்லது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் அரசு, தனியார் ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

2021- 22ஆம் கல்வி ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதியானவர்கள். அவர்கள் https://ift.tt/36en2Md என்ற இணையதளத்தில் ஜூலை 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்  மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களின் பட்டியல் https://ift.tt/36en2Md என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், 9-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றோர், 10-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடவும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 தொகையை இணையம் மூலம் செலுத்த வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : onlineitiadmission@gmail.com

கூடுதல் விவரங்களுக்கு: 9499055612 / வாட்ஸ்அப் எண் 9499055618


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3ADUaem
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments