கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்ததால், ௧௦ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கும் தேர்வை ரத்து செய்யக்கோரி, கோவை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்வின் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்போது, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.ஒரே வகையான பாடத்திட்டத்தை பின்பற்றினாலும், மாணவர்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படுகிறது.எனவே, தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கிடையில், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மாணவர் அஜய்தாஸ், மனு தாக்கல் செய்துஉள்ளார்
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3jHYoLP
via IFTTT
0 Comments