Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Flash News : திட்டமிட்டபடி செப்.1 முதல் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் - தமிழக அரசு





செப்.1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்தது.

அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் இயங்க அனுமதி.

செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்டபாடி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்து அதன்படி வழிகாட்டு நெறிமுறைகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 


ஆனால் கொரோனா மூன்றாம் பரவல் அச்சத்தால் பள்ளிகளை திறப்பது சரியாகுமா? என்ற குழப்பமும் நிலவியது

இந்நிலையில், நாளை மறுநாள் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கனவே வரும் ஒன்றாம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3zyflh0
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments