Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

🅱️கனமழை எதிரொலி : 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர்

*🅱️கனமழை எதிரொலி*


கனமழை விடுமுறை அறிவிப்பு.( 29.10.2021) 


*காரைக்கால் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*நாகை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*மயிலாடுதுறை  மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*திருச்சி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*நெல்லை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.


*தூதத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு








தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மயிலாடுதுறை, நாகை, திருச்சி, நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.


இதையடுத்து, இன்று காலையும் மழை தொடர்வதால் இந்த 7 மாவட்டங்களின் ஆட்சியர்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றிரவு முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.


இதனையொட்டி, நெல்லை, தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் என்றும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.



from கல்வி அமுது https://ift.tt/3jPmSlx
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments