Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய (28.10.2021) முக்கிய அறிவிப்பு.

TRB Press News Today (28.10.2021)

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை 1 ஆகிய ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு வாயிலாக நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் அரசாணை நிலை எண் . 144 , பள்ளிக் கல்வி ( ப.க .2 ( 1 ) துறை , நாள் 18.10.2021 ன்படி , ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. 


எனவே மேற்காணும் அரசாணையின்படி உச்ச வயது வரம்பினை உயர்த்தியும் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடத்திற்கு பணிநாடுநர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் போது M.P.Ed. , கல்வித் தகுதி ஒருவருடப் பயிற்சி காலம் முடித்தவர்கள் ( 2002 - ற்கு முன்பு முடித்தவர்கள் மட்டும் ) பதிவேற்றம் செய்வதற்கும் , மேலும் , முதுகலைப் பட்டப்படிப்பு முதல் வருடம் பயின்று பின்னர் B.Ed. , பட்டம் முடித்து அதன்பின்னர் முதுகலைப் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு சேர்ந்து பட்டம் பெற்றவர்கள் பதிவேற்றம் செய்வதற்கு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3pNH6zS
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments