எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வருகின்ற நவம்பர் 8ம் தேதி தொடங்க உள்ள எட்டாம் வகுப்பு தனித்தேர்வினை எழுத அரசு சார்பில் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மேற்படி இணையதளத்தில் உள்ள டாஸ்க் பாரில் உள்ள இ எஸ் எல் சி நவம்பர் 2011 என்ற பெயரில் ஆல் டிக்கெட் டவுன்லோட் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு இணையதள வாயிலாக ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் இல்லாமல் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு கூட அனுமதி சீட்டு குறித்து தனிப்பட்ட அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்.11 முதல் தனித்தேர்வர்கள் 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்து வந்த நிலையில் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-மொத்தம் ரூ.175/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம். தட்கலில் விண்ணப்பித்த தேர்வர்கள், தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.675 செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
from கல்வி அமுது https://ift.tt/2ZvcqbM
via IFTTT
0 Comments