Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மக்கள் பள்ளி திட்டம் " கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்ட நேரம் மாற்றம்.


மக்கள் பள்ளி ” திட்டம் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் தலைமையில் காணொளி வாயிலாக 07.10.2021 அன்று மாலை 7.00 மணியளவில் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் , 120 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பரிட்சார்ந்த முறையில் செயல்படுத்தவிருக்கும் 8 மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இக்கலந்தாலோசனை கூட்டம் நிர்வாக நலன்கருதி மாலை 7.00 மணிக்கு பதில் காலை 11.00 மணிக்கு குறித்தவாறு நடைபெறும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


 எனவே , இந்த காணொலி கலந்தாலோசனைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு “ மக்கள் பள்ளி ” திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு ஆவண செய்யுமாறு மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/2WOKoXz
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments