மாணவர்களை துபாய்க்கு சுற்றுலா அழைத்து செல்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
தற்போது வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, படிப்படியாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 - 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையில் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் வினாடி வினா போட்டியை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 18 முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை போட்டி நடத்தப்பட்டது. இதில் முன்னணி மதிப்பெண் பெற்ற 89 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

18.09.2021 முதல் 08.11.2021 வரை , இணைய வழியில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில் சிறந்து விளங்கிய , தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் 89 மாணவர்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . மேலும் , தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் , ஐக்கிய அரபு அமீரக ( United Arab Emirates ) நாட்டிலுள்ள , துபாய் ( Dubai ) நகரத்திற்கு , வருகிற 2021 , டிசம்பர் மாதம் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது .
மேலும் , மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வர மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே , இணைப்பிலுள்ள , தெரிவு செய்யப்பட்ட தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த , சுற்றுலா செல்ல விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோரிடமிருந்து , துபாய் நகரத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல இசைவு தெரிவித்து ஒப்புதல் பெற்ற விவரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை மாலை 3 19.11.25 ^ ( 19.11,202J மணிக்குள் இவ்வலுவலக " எம் பிரிவு " மின்னஞ்சல் முகவரிக்கு ( msectndse@gmail.com ) அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
மாவட்ட மேலும் , விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் , அவர்தம் அருகாமையிலுள்ள மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்திற்குச் ( Regional Passport Office ) சென்று விண்ணப்பித்து , கடவுச் சீட்டு பெறுவது சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியம் என்பதால் , உரிய தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .
இணைப்பு :
1. தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரம் ( மாவட்ட வாரியாக )
2. பெற்றோரின் ஒப்புதல் மாதிரி படிவம்
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3cvnwk7
via IFTTT
0 Comments