வருவாய் மாவட்ட அளவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணியிடத்தை நிரப்பவும் , இப்பணியிடமே இதுநாள் வரை அனுமதக்கப்படாத மேல்நிலைப்பள்ளிகளுக்கு , ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் வீதம் அரசு உயர்நிலைப்பள்ளிகளிலிருந்து பணியாளருடன் பணியிடத்தை மாற்றம் செய்யவும் , அரசு உயர்நிலப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப 9 ஆம் வகுப்பு 40 க்கும் குறையாமல் , 10 ஆம் வகுப்பு -40 க்கும் குறையாமல் , அல்லது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு -80 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் அவ்வகைப் பள்ளிகளில் மட்டும் ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சார்பாக 13.04.2022 க்குள் ஆய்வக உதவியாளர் பணியிட நிரவலை முடித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சுற்றறிக்கையின்படி ஆய்வக உதவியாளர் பணிநிரவல் செய்யும்பொழுது , பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிமூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி பணிநிரவல் செய்திட வேண்டும் எனவும் , சில மாவட்டங்களில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப்பட்டு பணியாளர்கள் பணிபுரிந்துவரும் சூழ்நிலையில் உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள பணியாளர்களை எவ்வாறு நிரவல் செய்வது என்பதற்கான தெளிவுரையினை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/G9FCxzB
via IFTTT
0 Comments