Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 Std Term-1 Science Unit-4 Part-1 Notes of Lesson I அலகு 4.1 : அணு அமைப்பு I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

          ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2022-23 (NOTES OF LESSON)


Topic              :     Notes of Lesson For 7th std  Science


Class            :       7 


Term               :     1


Subject          :     SCIENCE


Unit                 :    4  Part-1


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


CLICK HERE TO DOWNLOAD


கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 7              பருவம் :1       பாடம் : அறிவியல்              பக்கம் எண் : 53-58

அலகு 4.1 : அணு அமைப்பு

அலகின் தன்மை : மை சிந்தும் வகை                   கற்கும் முறை : குழு கற்றல்

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        அணு மாதிரி, தாம்சனின் அணு மாதிரி, அணு அமைப்பு கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி CHART.

கற்றல் விளைவுகள் :

L.O : S709 படங்களைப் பாகங்கள் குறித்து வரைதல் / உயிரினங்களின் செயல்பாடுகளைச்  செயல் வரைபடமாக வரைதல்.

  • ·        அணு அமைப்பின் படம் வரைந்து அதன் அடிப்படைத் துகள்களின் நிலையினை விளக்குதல்.

L.O : S711 சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி அவை   செயல்படும் விதத்தை விவரித்தல்.

  • ·        அணு அமைப்பு மாதிரியை உருவாக்கி அதன் பகுதிப்பொருள்களை அறிதல்.

L.O : S712 அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக் கலந்துரையாடல் மற்றும் போற்றுதல்.

  • ·        அணு அமைப்பு கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி பற்றி கலந்துரையாடல்.

கற்றல் நோக்கங்கள் :

  • v  அணு எவ்வளவு சிறியது என்பதை தெரிந்து கொள்ளுதல்.
  • v  அணு வினை பற்றிய கொள்கையின் பரிணாம வளர்ச்சியை அறிதல்.
  • v  அணுவின் பகுதிப் பொருட்கள் கண்டறிந்த காலங்களை அறிதல்.

அறிமுகம் :

         மேசை, நாற்காலி , புத்தகம், சாக்பீஸ் கரும்பலகை  ஆகிய அனைத்தும் எதனால் ஆனதுநாம் காணும் அனைத்து பொருள்களும் எதனால் ஆனது என்ற வினாக்கள் வாயிலாக அணுவைப் பற்றி அறிமுகம் செய்தல்.

படித்தல் :

அணு வினை பற்றிய கொள்கையின் பரிணாம வளர்ச்சி அடங்கிய பாடக் கருத்துக்களை மாணவக்குழுக்களை படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

 

மனவரைபடம்



தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

v  ஒரு அணு எவ்வளவு  சிறியது என்பதனை ஒரு பென்சில், வைரஸ்,இரத்த செல் போன்ற பொருளுடன் ஒப்பிட்டுக்  கூறுதல்.

v  அணுவினை பற்றிய கொள்கையின் பரிணாம வளர்ச்சியை பட்டியலிடுதல்.

v  டால்டனின் அணுக்கொள்கைதாம்சனின் அணுக்கொள்கை, ரூதர்போர்டின் அணுக்கொள்கைளை  ஒப்பிட்டு தொகுத்து வழங்கதல்.

v  அனுவின் பகுதிப்பொருள்கள் கண்டறிந்த காலங்களை அட்டவணைப்படுத்துதல்

வலுவூட்டல் :

  • செயல்பாடு 1 :  நமக்கு  தெரிந்த பொருள்களின் பெயர்களையும்  அவை எதனால்  உருவானது     என்பதனையும் எழுதச் செய்தல்.
  • செயல்பாடு 2 : அணு அமைப்பு மாதிரி வரைபடம் தயாரித்தல்.
  • செயல்பாடு 3 : இணையச் செயல்பாடு, க்யூ ஆர் கோடு வீடியோ மற்றும் மாணவர்கள் செயல்பாடுவாயிலாக  பாடக் கருத்துக்களை மேலும் விளக்குதல்.

 

மதிப்பீடு :

1.      ஒரு நானோ மீட்டர் = _______________

2.      பருப்பொருளின் அடிப்படை அலகு ____________

3.      டால்டன் அணுக் கொள்கை வெளியிட்ட ஆண்டு  __________

4.      தாம்சன் அணுக் கொள்கை வெளியிட்ட ஆண்டு  __________

குறைதீர்க் கற்றல் :

        QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து மீத்திறன் மாணவர்கள் மூலாம் செயல்பாடுகளை செய்து மீளக்கற்கச் செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

        FA (a) : 1. டால்டன், அணு மாதிரிகளை தயாரித்து வரச் செய்தல்.

 

        FA (a) : 2. தாம்சன் அணு மாதிரியை தயாரித்து வரச் செய்தல்.

 

              FA (a) : 3. ரூதர்ஃபோர்டு அணு மாதிரியை தயாரித்து வரச் செய்தல்.
















Reactions

Post a Comment

0 Comments