ஆசிரியர் பாடக்குறிப்பேடு 2022-23 (NOTES OF LESSON)
Topic : Notes of Lesson For 7th std Science
Class : 7
Term : 1
Subject : SCIENCE
Unit : 3 Part-2
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
கல்வி அமுது
ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON
வகுப்பு : 7 பருவம் :1 பாடம் : அறிவியல் பக்கம் எண் : 42-52
அலகு 3.2 : நம்மைச்
சுற்றியுள்ளப் பருப்பொருள்கள்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை கற்கும் முறை : குழு கற்றல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
NaCl,
NaOH, தனிமங்களின் குறியீடு Chart, மின் அட்டைகள், சுழல் அட்டைகள், இணையவளங்கள்
கற்றல் விளைவுகள் :
L.O : S702 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).
- ·
தனிமம் மற்றும் சேர்மம் ஆகியவற்றை வேறுப்டுத்துதல்.
- ·
அலோகங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துதல்.
L.O : S705 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு
தொடர்புபடுத்துதல்.
- ·
திண்ம,
திரவம் மற்றும் வாயுக்களின் மீது வெப்பத்தின் விளைவு.
L.O : S707 வேதிவினைகளுக்கான சொற்சமன்பாடுகளை எழுதுதல்.
- ·
வேதித்
தனிமத்தின் அமைப்பைக் குறிக்கும் வேதி குறியீடுகளை அறிதல்.
கற்றல் நோக்கங்கள் :
- Ø பொதுவாகப் பயன்படுத்தப்படும் தனிமங்களின் குறியீடு
& அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுதல்.
- Ø இயற்கையில், மனித
உடலில், காற்றில் உள்ள தனிமங்கள் மற்றும்
சேர்மங்களைப் பற்றி அறிதல்.
- Ø திண்மம், திரவம்
மற்றும் வாயுவில் ஏற்படும் வெப்ப விளைவுகளைப் புரிந்து கொள்ளுதல்.
அறிமுகம் :
ஒரு தனிமத்தின் குறியீடு என்பது அத்தனிமத்தினைச் சுருக்கமாகக்குறிப்பிடக்கூடிய
முறையாகும்.
இக்குறியீடு அத்தனிமத்தின் ஒரு அணுவினைக் குறிக்கிறது. இக்குறியீடுகள்
International
Union of Pure and
Applied Chemistry (IUPAC) யினால் அங்கீகரிக்கப்பட்டு
உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என அறிமுகம்
செய்தல்.
படித்தல் :
தனிமங்களின் குறியீடு & அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுதல், இயற்கையில், மனித உடலில், காற்றில் உள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள், திண்மம், திரவம் மற்றும் வாயுவில் ஏற்படும் வெப்ப விளைவு போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.
மனவரைபடம் :
தொகுத்தலும் வழங்குதலும் :
மன வரைபடத்தில் உள்ள
விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச்
செய்தல்.
v
டால்டனால்
முன்மொழியப்பட்ட சில தனிமங்களின் குறியீடுகளை வரைந்து விளக்குதல்.
v
தனிமங்களின்
குறியீட்டை எழுதும்போது பின்பற்றும் விதிமுறைகளை வரிசைப்படுத்துதல்.
v
சில தனிமங்களின்
அணுக்கட்டு எண்களைப் பட்டியலிடுதல்.
v
திண்மம்,
திரவம் மற்றும் வாயுக்களின் வெப்ப விளைவுகளை தொகுத்தல்.
v
இயற்கையில்,
மனித உடலில், காற்றில்
உள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்களைப் பட்டியலிடல்
வலுவூட்டல் :
v
செயல்பாடு
1 : ஒற்றை,இரட்டை
எழுத்துகளில் குறிப்பிடப்படுகின்ற சில தனிமங்களின்
குறியீடுகளை
எழுத வைத்தல்.
v
செயல்பாடு
2 : பொதுவான சேர்மங்களும் அதன் வேதியியல் வாய்ப்பாடும்
அடங்கியப்
பொருத்து
அட்டையைப் பொருத்தச் செய்தல்.
v செயல்பாடு 3 : தனி்மங்கள் மற்றும்
சேர்மங்களின் அணுக்கட்டு எண்னணக் கணக்கிடுதல்.
மதிப்பீடு :
- ·
IUPAC –
ன் விரிவாக்கம்
-------------------------------------------------------.
- ·
தங்கத்தின்
குறியீடு _______________.
- · நீரின் அணுக்கட்டு எண் ____________.
குறைதீர்க் கற்றல் :
QR
CODE ல்
உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து
செயல்பாடுகளை
செய்து கற்கச் செய்தல்
எழுதுதல் :
பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு
எழுதி வரச் செய்தல்.
தொடர்பணி :
FA (a)
: 1. கீழ்கண்ட
தனிமங்களின்
குறியீடுகளை
நிரப்பி வரச் செய்தல். (தங்கம்,வெள்ளி,தாமிரம்)
FA
(a) : 2. கீழ்க்கண்ட
தனிமம் சேர்மங்களின் அணுக்கட்டு எண்களை எழுதி வரச் செய்தல்.
Cl, Na, K, H20,
NaCl, Ca
0 Comments