Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 Std Term-1 Science Unit-5 Part-2 Notes of Lesson I அலகு 5.2 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

 ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2022-23 (NOTES OF LESSON)


Topic              :     Notes of Lesson For 7th std  Science


Class                 :       7 


Term               :     1


Subject          :     SCIENCE


Unit                 :    5 PART-2


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


CLICK HERE TO DOWNLOAD


கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 7                     பருவம் :1                      பாடம் : அறிவியல்          பக்கம் எண் : : 81-89    

அலகு 5.2: தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை      கற்கும் முறை : குழு கற்றல்     

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        கேரட், முள்ளங்கி, பீட்ரூட், கள்ளி, வெற்றிலை, இஞ்சி, வெங்காயம், இணையவளங்கள்

கற்றல் விளைவுகள் :

L.O : S701 பொருள்கள் மற்றும் உயிரினங்களை இனங்காணல் (IDENTIFICATION)

  • ·        வேர், தண்டு மற்றும் இலைகளின் மாற்றுருக்களை இனங்காணுதல்.

L.O : S706  செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்.

  • ·        தாவரங்களின் இனப்பெருக்கம், மகரந்தச் சேர்க்கை, கருவுறுதல்,தாவரங்களின் மாற்றுருக்கள்

L.O : S709 படங்களைப் பாகங்கள் குறித்து வரைதல் / உயிரினங்களின் செயல்பாடுகளைச்  செயல் வரைபடமாக வரைதல்.

  • ·        மலரின் நீள்வெட்டுத் தோற்றம் படம்  வரைந்து பாகங்கள் குறித்தல்.

 

கற்றல் நோக்கங்கள் :

  • v  வேர், தண்டு மற்றும் இலைகளின் மாற்றுருக்கள் அறிதல்.
  • v  தாவரங்களின் மாற்றுருக்கள் எவ்வாறு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பயன் தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

அறிமுகம் :

        முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சப்பாத்திக்கள்ளி, பட்டானிச்செடி,  வல்லாரைவெங்காயம்,பூண்டு இவற்றையெல்லாம் காட்டி அதன் மாற்றுருக்களைப்பற்றி விவாத்தித்து தாவரங்களின் மாற்றுருக்களைப்பற்றி அறிமுகம் செய்தல்.

படித்தல் :

தாவரங்களின் மாற்றுருக்கள் அடங்கியப் பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

மனவரைபடம் :



தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

o   சில தாவரங்களின் வேர், தண்டு மற்றும் இலைகள் சிறப்பு பணிகளான உணவு சேமித்தல், கூடுதல் ஆதாரம், பாதுகாப்பு மற்றும் இன்னும் முக்கியமான பணிகளைச் செய்யத் தாவரம் தன் வடிவம் மற்றும் அமைப்பை மாற்றிக் கொள்கின்றன. இதற்கு மாற்றுரு என்று பெயர்.

o   வேர், தண்டு மற்றும் இலைகளின் மாற்றுருக்கள் பற்றி தொகுத்து வழங்குதல்.

o   சில தாவரங்களில் வேர்கள் நிலமட்டத்திற்கு மேல் தண்டிலோ, இலைகளிலோ காணப்படுகின்றன. இவை மாற்றிட வேர்கள் என அழைக்கப்படுகின்றன.

வலுவூட்டல் :

v  செயல்பாடு 1 : வேரின் மாற்றுருக்கள் பற்றி அறிய முள்ளங்கி, டர்னிப், பீட்ரூட் மற்றும்

                 கேரட்டைக் காட்டி மாற்றுருக்களையும் வடிவங்களையும் அறிதல்.

v  செயல்பாடு 2 : மஞ்சள், உருளைக்கிழங்கு, இஞ்சி ஆகியவற்றைக்காட்டி அதன் மற்றுருக்களை

                 அறியச் செய்தல்.

v  செயல்பாடு 3 : தாவரங்களின் மாற்றுக்கள் விள்க்க மாணவர்களை பாத்திரமேற்று நடிக்கச்

                 செய்தல்.

மதிப்பீடு :

Ø  சுவாச வேர்கள் _______________ தாவரத்தில் காணப்படுகின்றன.

Ø  வெங்காயம் மற்றும் பூண்டு  __________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Ø  பொருத்துக.

1. அல்லி                                                              -                  சப்பாத்திக் கள்ளி

2. பெரணி                                                           -                  கிரைசாந்திமம்

3. இலைத் தொழில் தண்டு            -                  பூச்சிகளை ஈர்க்கிறது

4. கொக்கி                                                          -                  ஸ்போர்

5. தரைகீழ் ஓடு தண்டு                        -                  பிக்னோனியா

குறைதீர்க் கற்றல் :

        QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து செயல்பாடுகளை செய்தும் மீளக் கற்கச்செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

        FA (a) :  தாவரஉறுப்புகளின் மாற்றுருக்களை அறிய மாற்றுருக்களைப் பெற்றுள்ள தாவரங்களை

                 சேகரிக்கச் செய்தல், படத்தொகுப்பு தயாரித்து வரச் செய்தல்




Reactions

Post a Comment

0 Comments