Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 Std Science Term-1 Unit-6 Part-1 Notes of lesson t/m I அலகு 6.1 : உடல்நலமும் சுகாதாரமும் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

 

கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

6 Std Term-1 Science Unit-6 part-1Notes of Lesson I 6 அறிவியல் ஆசிரியர் பாடக்குறிப்பேடு I Based on New Syllabus

      ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2022-23 (NOTES OF LESSON)


Topic             :     Notes of Lesson For 6th std  Science


Class             :     


Term               :    1


Subject          :     SCIENCE


Unit                 :    6 Part-1


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


we share you the model lesson plan for all subjects.



click here to download


வகுப்பு : 6            பருவம் :1             பாடம் : அறிவியல்        

அலகு 6.1 : உடல்நலமும் சுகாதாரமும்

அலகின் தன்மை : மை சிந்தும் வகை       கற்கும் முறை : குழு கற்றல்   பக்கம் எண் : 91-102

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        ஊட்டச் சத்துப்பொருட்கள், உருளை, அயோடின் கரைசல், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, முட்டை, தாமிர சல்பேட், சோடியம் ஹைட்ராக்ஸைடு, சோதனைக் குழாய்கள்,இணையவளங்கள்.

கற்றல் விளைவுகள் :

L.O : S603 உணவின் பல்வேறு உட்கூறுகளை  வகைப்படுத்துதல்(CLASSIFICATION)

L.O : S604 எளிய பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல.

v  கொடுக்கப்பட்ட உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் உள்ளதா? என சோதித்து அறிதல்)

L.O : S605 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்.

v  வைட்டமின், புரதம், தாது உப்புகள் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அதன் அறிகுறிகளையும் தொடர்புபடுத்தல்.

கற்றல் நோக்கங்கள் :

  • v  உணவில் உள்ள சத்துக்களின் முக்கியத்துவத்தைக் கண்டறிதல்.
  • v  சரிவிகித உணவுப்பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் அறிதல்.
  • v  சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்களை அறிதல்.

அறிமுகம் :

  WHO பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் நம் உடலினையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியமா? என்ற வினாக்கள் வாயிலாக உடல்நலம் சுகாதாரம் பற்றி அறிமுகம் செய்தல்.

படித்தல் :

     ஊட்டச் சத்துக்கள், சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள், போன்ற பாடக்கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

மனவரைபடம் :



 

தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

Ø  உணவில் உள்ள வேதிப்பொருட்களின் அடிப்படையில் சத்துப்பொருட்களை 6 முக்கிய வகைகளாகப் பிரித்துத் தொகுத்தல்.

Ø  சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அதன் அறிகுறிகளையும் அட்டவணைப்படுத்துதல்.

Ø  சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை விளக்குதல்.

வலுவூட்டல் :

QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்.

செயல்பாடு  : கொடுக்கப்பட்டுள்ள உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு உள்ளதா?

                 என சோத்னை மூலம் அறிதல்.

மதிப்பீடு :

v  நீரில் கரையும் வைட்டமின்கள் ________ & ____________________.

v  வைட்டமின் B குறைபாட்டால் ஏற்படும் நோய் _______________.

v  சரிவிகித உணவு என்றால் என்ன?


குறைதீர்க் கற்றல் :

        மீத்திறன் மாணவர்கள் மூலம் மெல்ல மலரும் மாணவர்களுக்கு மீளக் கற்பித்தல்.

 

 எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

        FA (a) : 1. முளைக்கட்டிய தானியங்களை செய்து வரச் செய்தல்.

 

        FA (a) : 2.  ஊட்டச்சத்து அடங்கிய பொருள்களின் படங்களை சேகரித்து தாளில் ஒட்டி சமர்ப்பிக்கச் செய்தல்.




Reactions

Post a Comment

0 Comments