Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 Std Science Term-1 Unit-1 Notes of lesson t/m I அலகு 1 : அளவீடுகள்I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

  ஆசிரியர் பாடக்குறிப்பேடு  (NOTES OF LESSON)

Topic              :     Notes of Lesson For 7th std  Science


Class                 :        7 


Term               :      1


Subject          :     SCIENCE


Unit                 :    1


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


CLICK HERE TO DOWNLOAD


ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 7                       பருவம் :1                              பாடம் : அறிவியல்

அலகு 1 : அளவீடுகள்

அலகின் தன்மை : மை சிந்தும் வகை     கற்கும் முறை : குழு கற்றல்    பக்கம் எண் : 1-16

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        இலை, வரைபடத்தாள், அளவிடும் குவளைகள், இரும்புக் குண்டு, இணையவளங்கள்  

கற்றல் விளைவுகள் :

L.O : S704 எளிய பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல்.

·        ஒழுங்கற்றப் பொருள்களின்  பரப்பு , பருமன் காணல்.

எ.கா : இலையின் பரப்பை காணல், கல்லின் பருமன் காணல்.

L.O : S705 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்.

·        வானியல் பொருள்களின் தொலைவினை அளத்தல்.

·        வெவ்வேறு பொருள்களின் அடர்த்தி.

L.O : S708 அ. இயற்பியல் அளவுகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல்

         ஆ. அளந்து கணக்கீடு செய்தல்

·        ரப்பு, பருமன், அடர்த்தி ஆகியவற்றை அளவிட்டு கணக்கிடல்.

L.O : S710 வரைபடங்களில் குறித்தல் மற்றும் விளக்குதல்.

·        இலையின் பரப்பை வரைபடத்தாளில் மூலம் கணக்கிடல்.

கற்றல் நோக்கங்கள் :

v  அடிப்படை மற்றும் வழி அலகுகளை அறிதல்.

v  பொருள்களின் அடர்த்தி, பருமன்,நிறை ஆகியவற்றிற்கான தொடர்பை அறிதல்.

v  வானியல் அலகு மற்றும் ஒளி ஆண்டு ஆகியவற்றினைப் பற்றி அறிதல்.

அறிமுகம் :

ஆய்வகத்தில் உள்ள அளவீட்டுக் கருவிகளை காட்டுதல், நம் அன்றாட வாழ்வில் பழங்கள், காய்கறிகள், துணி, பால், நேரம் ஆகியவற்றை எவ்வாறு அளந்தறிகிறோம் என வினா எழுப்புதல்..

படித்தல் :

அடிப்படை மற்றும் வழி அளவுகள், வானியல் பொருள்களின் தொலைவை அளத்தல் போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிடச் செய்து விளக்கம் அறியச் செய்தல்.

 

 

மனவரைபடம் :



தொகுத்தலும் வழங்குதலும் :

வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

v  அடிப்படை அளவுகள்,அலகுகள் மற்றும் வழி அளவுகள்,அலகுகள் அட்டவணைப்படுத்துதல்.

v  ஒழுங்கான, ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பினை வேறுப்படுத்தி கணக்கிடல்.

v  கன அளவு, அடர்த்தி, வானியல் பொருளின் தொலைவினை அளத்தல் போன்ற விபரங்களை வரிசைப்படுத்துதல்.

வலுவூட்டல் :

v  செயல்பாடு 1 : ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவை வரைபடம் மூலமாகவும்,  

                  சூத்திரம் வாயிலாகவும் கணக்கிடல்.

v  செயல்பாடு 2 : ஒழுங்கற்ற வடிவமுடையப் பொருள்களின் பருமனைக் காணல்.

v  செயல்பாடு 3 : அடர்த்தி, நிறை, பருமன் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பினைக் சூத்திரம் 

              மூலம் கணக்கிடுதல்.

மதிப்பீடு :

  • ·        அடர்த்தி, கனஅளவு, பரப்பு ஆகியவற்றின் SI அலகு?
  • ·        ஒரு வானியல் அலகு என்பது ___________________.
  • ·        சமநிறையுள்ள இருகோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1எனில் அவற்றின் அடர்த்தி விகிதம்

குறைதீர்க் கற்றல் :

        QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களாக செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

        FA (a) : ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருளின் (இலையின்) பரப்பினை வரைபடத் தாளினைக் கொண்டு சூத்திரத்தைப் பயன்படுத்தி பரப்பினைக் கண்டறிந்து வருதல்.




Reactions

Post a Comment

0 Comments