Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 Std Term-1 Science Unit-2 Notes of Lesson I அலகு 2 : விசையும் இயக்கமும் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

   ஆசிரியர் பாடக்குறிப்பேடு  (NOTES OF LESSON)

Topic             :     Notes of Lesson For 7th std  Science


Class                 :    7 


Term               :     1


Subject          :     SCIENCE


Unit                 :    2


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


CLICK HERE TO DOWNLOAD



ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 7              பருவம் :1            பாடம் : அறிவியல்        பக்கம் எண் :17-32

அலகு 2 : விசையும் இயக்கமும்

                 அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை           கற்கும் முறை : இணை கற்றல்

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        வரைபடத்தாள், நூல், தலையாட்டி பொம்மை, அளவுகோல், நிறுத்து கடிகாரம், இணையவளங்கள்

கற்றல் விளைவுகள் :

L.O : S702 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).

·        தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியை வேறுபடுத்தல்.

·        வேகம் மற்றும் திசைவேகத்தை வேறுபடுத்தல்.

L.O : S704 எளிய பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிதல்.

·        எளிய சோதனைகள் மூலம் ஈர்ப்பு மையம் மற்றும் சமநிலை, அறிந்து நடைமுறை பயன்பாட்டை அறிதல்.

L.O : S710 வரைபடங்களில் குறித்தல் மற்றும் விளக்குதல்

·        தொலைவு, காலம், திசைவேகம் – காலம் வரைபடங்களை வரைந்து விளக்குதல்.

L.O : S712 அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக் கலந்துரையாடல் மற்றும் போற்றுதல்.

·        தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் அறிவியல் கண்டுபிடிப்பின் உண்மை பற்றி கலந்துரையாடல்.

கற்றல் நோக்கங்கள் :

v  தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியை வேறுபடுத்தி அறிதல்.

v  தொலைவு, காலம்,வேகம், திசைவேகம், ஈர்ப்பு மையம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுதல்.

அறிமுகம் :

உன் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு? வீட்டிலிருந்து பள்ளிக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு கூம்பின் அடிப்பரப்பினை மேசை மீது வைத்து ஏன் விழுகிறது? என வினா எழுப்பி இடப்பெயர்ச்சி, தொலைவு, வேகம், ஈர்ப்புமையம் போன்றவற்றை அறிமுகம் செய்தல்.

படித்தல் :

தொலைவு & இடப்பெயர்ச்சி, வேகம்-திசைவேகம், முடுக்கமீர்ப்புமையம் மற்றும் சமநிலை ஆகிய பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிடச் செய்து விளக்கம் அறியச் செய்தல்.

 

மனவரைபடம் :

 


தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

·        இடப்பெயர்ச்சி மற்றும் தொலைவினை வேறுபடுத்துதல்.

·        வேகம் மற்றும் திசைவேகத்தை வேறுபடுத்தி வேகத்தின் வகைகளை வரிசைப்படுத்துதல்.

·        தொலைவு - காலம், வேகம்காலம் வரைபடம் வரைதல்.

·        ஒழுங்கான,ஒழுங்கற்றப் பொருள்களின் ஈர்ப்பு மயம் பற்றி விவாதித்தல்

·        சமநிலை வகைகளை வரிசைப்படுத்தி கூறுதல்.

வலுவூட்டல் :

v  செயல்பாடு 1 : வீட்டிற்கும் பள்ளிக்குமான பாதைகளை வரையச்செய்து இடப்பெயர்ச்சி, தொலைவினை வேறுபடுத்தி அறிதல்

v  செயல்பாடு 2 : கி.மீ / மணியை மீ/வி யாக கணக்கீடு மூலம் மாற்றுதல்.

v  செயல்பாடு 3 : தொலைவு - காலம், வேகம்காலம் வரைபடத்தை வரைபடத்தாளில் வரைதல்.

மதிப்பீடு :

·        1 நாட்டிக்கல் மைல் என்பது ______________ கி.மீ

·        இடப்பெயர்ச்சியும், தொலைவும் ஒன்றா?

·        இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுகடுக்கம் வற்றின் அலகு ______________.

·        வேகம் காலம் வரைபட்த்தின் சாய்வு ______ மதிப்பினைத் தருகிறது.

குறைதீர்க் கற்றல் :

        QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

        FA (a) : மகிழுந்து செல்லும் வேகத்தின் காலம்,தொலைவு அட்டவணை கொடுத்து தொலைவு காலம் வரைபடம் வரைந்து வரச் செய்தல். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரியை செய்து வரச் செய்தல்.



Reactions

Post a Comment

0 Comments