ஆசிரியர் பாடக்குறிப்பேடு 2022-23 (NOTES OF LESSON)
Topic : Notes of Lesson For 7th std Science
Class : 7
Term : 1
Subject : SCIENCE
Unit : 6 Part-2
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON
வகுப்பு : 7 பருவம் :1 பாடம் : அறிவியல் அலகு 6.2 : உடல்நலமும்
சுகாதாரமும்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை கற்கும் முறை : குழு கற்றல் பக்கம் எண் : 99-109
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
படத்தொகுப்பு,
வீடியோக்கள், மின் அட்டைகள், சுழல் அட்டைகள், சார்ட்.
கற்றல் விளைவுகள் :
L.O :
S706 செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்.
·
உடலை பாதுகாக்கும் வழிமுறைகளை விளக்குதல்.
L.O :
S712 அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக்
கலந்துரையாடல் மற்றும் போற்றுதல்.
·
மருந்துகளின் இராணி – பென்சிலின் கண்டுபிடிப்பு கதையை விவாதித்தல்.
L.O :
S713 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில்
பயன்படுத்துதல்.
·
சில பொதுவான நோய்கள் மற்றும் அவற்றைக் குணப்படுத்தும்
வழிமுறைகளை
அன்றாட வாழ்வில்
பயன்படுத்துதல்.
·
முதலுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி
அறிந்து தக்க சூழலில் பயன்படுத்தல்.
கற்றல் நோக்கங்கள் :
v
தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றி
அறிதலும் புரிதலும்.
v
சில பொதுவான நோய்கள் மற்றும் அவற்றைக்
குணப்படுத்தும் வழிமுறைகள்
பற்றி அறிதலும் புரிதலும்.
v
முதலுதவி மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகளைப் பற்றி அறிதல்.
அறிமுகம் :
ஒரு நபர்க்கு
நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? எப்பொழுதெல்லாம் கை கழுவ வேண்டும் ஏன்? திறந்த வெளியில் மலம் கழிக்கலாமா? என்ற சிந்தனை வினாக்கள் வாயிலாக நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பத்னைப் பற்றி அறிமுகம் செய்தல்.
படித்தல் :
நோய்கள், நோய் பவும் முறைகள், அதன் அறிகுறிகள், தடுக்கும்
முறைகள் போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.
மனவரைபடம் :
தொகுத்தலும் வழங்குதலும் :
மன வரைபடத்தில் உள்ள
விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச்
செய்தல்.
Ø தொற்று
நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை வேறுபடுத்தி விளக்குதல்.
Ø நோய்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகளை
அட்டவணைப்படுத்துதல்.
Ø முதலுதவி
பற்றிய செய்திகளைத் தொகுத்து விளக்குதல்.
வலுவூட்டல் :
QR CODE
ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து
செயல்பாடுகளை
செய்து கற்கச் செய்தல்
மதிப்பீடு :
§
புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது
_________________.
§
காசநோய் என்பது _______________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
§
முதல்நிலைத் தீக்காயம்: மேற்புறத்தோல்:: இரண்டாம்நிலைத்
தீக்காயம் : _____________
§
டைபாய்டு: பாக்டீரியா :: ஹெபடைடிஸ் : ________________.
§
காசநோய்: காற்று :: காலரா : ___________________.
குறைதீர்க் கற்றல் :
மீத்திறன் மாணவர்களைக் கொண்டு மெல்ல மலரும் மாணவர்களுக்கு மீளக் கற்பித்தல்.
எழுதுதல் :
பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு
எழுதி வரச் செய்தல்.
தொடர்பணி :
FA (a) : அருகில் உள்ள சுகாதார மையத்திற்குச் சென்று மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து நோய்கள் பரவாமல் தடுக்கும் முறைகளையும் அதிகமாக தங்கள் ஊரில் பரவும் நோய்களையும் அறிந்து வரச் செய்தல்.
0 Comments